Advertisement
Advertisement

என்னை பூதம் என்று நினைக்கிறாரா பிரதமர்? – நாராயணசாமி

அரசு நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவது என்ற நோய் புதுச்சேரியில் இருந்து தமிழகத்துக்கும் பரவிவிட்டதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிர்வாகத்தில் தலையிட ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றார். தமிழக முதலமைச்சரோ, துணை முதலமைச்சரோ சந்திக்க நேரம் கேட்டால் ஒதுக்கும் பிரதமர் தான் சந்திக்க நேரம் கேட்டால் மட்டும் ஒதுக்க மறுப்பதாகக் கூறிய நாராயணசாமி, தன்னை பிரதமர் பூதம் என எண்ணுகிறாரோ எனக் கேள்வி எழுப்பினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன