ஊழல் வழக்கு விசாரணையில் நவாஸ் ஷெரீப் ஆஜராகவில்லை

பாகிஸ்தான் நீதிமன்றத்தில் இன்று தொடங்கிய ஊழல் வழக்கு விசாரணையில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆஜராகவில்லை.

பனாமா பேப்பர் ஊழல் வழக்கில் சிக்கிய முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம், அவர் மீதான வழக்கின் விசாரணையை 6 மாதத்தில் முடிக்கவும் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, அவர் மீதான வழக்கின் விசாரணை இன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மனைவிக்கு சிகிச்சை பெறுவதற்காக நவாஸ் ஷெரீப் லண்டனுக்கு சென்றுள்ளார். இதை நவாஸ் ஷெரீப்பின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து, அவர் மீதான வழக்கின் விசாரணை வரும் செப்டம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன