Advertisement
Advertisement

ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் சொத்துகள், பங்குகள், பணத்தை ஒப்படைத்தால் விடுதலை

சவூதி அரேபியாவில் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் சொத்துக்கள் மற்றும் பணத்தை ஒப்படைத்தால் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் மிகப்பெரும் கோடீஸ்வரரான இளவரசர் அல்வாலீத் பின் தலால் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இளவரசர்கள், அமைச்சர்கள், கோடீஸ்வரர்கள் உள்ளிட்டோரை கைது செய்து பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நடவடிக்கை எடுத்தார்.

இந்நிலையில் விடுதலை பெற விரும்புபவர்கள் அதற்கு ஈடாக சொத்துக்கள், பங்குகள், பணம் உள்ளிட்டவற்றை ஒப்படைக்க சவூதி அதிகாரிகள் அவர்களுடன் ஒப்பந்தமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஒரு தொழிலதிபர் கோடிக்கணக்கான சவூதி ரியால்களை கொடுத்ததாகவும், கைதான முன்னாள் அதிகாரி ஒருவர் 400 கோடி ரியால்கள் மதிப்புள்ள பங்குகளை கொடுக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன