ஊழல் அரசியல்வாதிகளை ஓரம்கட்ட வேண்டும் – பிரதமர் மோடி

ஊழல் அரசியல்வாதிகளை ஓரம் கட்ட வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். காவல்துறை நடவடிக்கையை அரசியல் பழிவாங்கும் செயல் அரசியல்வாதிகள் கூச்சலிடுவதாக அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திரிணாமூல் காங்கிரஸ் ,ராஷ்ட்டிரிய ஜனதா தளம் போன்ற மாநில அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்கள் பலர் ஊழல் புகார்களுக்கு ஆளாகியுள்ள நிலையில், ஊழல் அரசியல்வாதிகள் மீதான சட்டநடவடிக்கை அவசியம் என்று வலியுறுத்தினார்.

பொதுவாழ்வில் இருப்பவர்கள் தங்கள் பதவிகளுக்கான மரியாதை காப்பாற்ற வேண்டும் என்று கூறியுள்ள பிரதமர் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்கள் கட்சியை ஆக்ரமித்துள்ள ஊழல் தலைவர்களை ஒதுக்கி ஓரம் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன