Advertisement

ஊழல் அதிகாரிகள் பட்டியலை தயாரிக்க மத்திய அரசு உத்தரவு

ஊழல் மற்றும் லஞ்சத்தை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மத்திய அரசு, முதற்கட்டமாக ஊழல் அதிகாரிகளை களையெடுக்க முடிவு செய்துள்ளது.

இதனையடுத்து, துறைவாரியாக பணிபுரியும் ஊழல் அதிகாரிகளின் பட்டியலை வழங்குமாறு, ஒவ்வொரு அமைச்சகங்களின் கீழ் இயங்கும் லஞ்ச ஒழிப்புக் குழுக்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஊழல் அதிகாரிகள் பட்டியலை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்குள் அனுப்ப உத்தரவிட்டுள்ள மத்திய அரசு, பட்டியலில் இடம்பெற்றுள்ள அதிகாரிகளின் மீது ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு பிறகு நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஊழல் அதிகாரிகள் பட்டியல் மத்திய புலனாய்வுத்துறை மற்றும் மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் ஆகியவற்றுக்கும், கூடுதல் நடவடிக்கைக்காக பகிரப்படும் என்றும் கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன