உ.பி. சட்டமன்றத்தில் வெடிப்பொருள் வைத்தது தாவூத்தின் ஆட்கள் என சந்தேகத்தைக் கிளப்புகிறார் அமர்சிங்

உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத்தில் வெடிப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் கைவரிசை இருப்பதாக சமாஜ்வாதிக் கட்சியில் இருந்த அமர்சிங் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில் தாவூத்தின் ஆட்கள் சட்டமன்றத்தில் வெடிபொருள்களை வைத்திருக்கலாம் என்றும் அவர் கூறினார். சமாஜ்வாதி கட்சியின் அபு ஆஸ்மிக்கு தாவூத்துடன் ஏற்கனவே நெருங்கிய தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள அமர்சிங், அபு ஆஸ்மியின் வெளிநாட்டுப் பயணங்களை பாதுகாப்பு பிரிவினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன