உ.பி. சட்டப் பேரவைக்குள் அதிரடிப்படையினர் ஒத்திகை

உத்தரப்பிரதேச சட்டப் பேரவையில் கமாண்டோ படையினர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். சட்டப்பேரவைக்குள் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டால் எப்படி எதிர்கொள்வது என்பதற்காக இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

இதற்காக பேரவை வளாகத்தில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டிருந்தன.

தொடர்ந்து நவீன ஆயுதங்களைத் தாங்கிய காமாண்டோ படையினர் சட்டப்பேரவை வளாகத்துக்குள் அதிரடியாகப் புகுந்து தாக்குதல் நடத்துவது போலவும், தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடிப்பது போலவும் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

அண்மையில் உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்குள் அதிக சக்தி வாய்ந்த வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன