உ.பி. சட்டப்பேரவையில் கண்டுபிடிக்கப்பட்ட வெள்ளை நிறப்பவுடர், வெடிபொருள் அல்ல – தடயவியல் ஆய்வகம்

உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் கண்டுபிடிக்கப்பட்ட வெள்ளை நிறப்பவுடர், வெடிகுண்டுக்கான மூலப்பொருள் இல்லை என்று ஆக்ரா தடயவியல் ஆய்வகம் கூறியுள்ளது.

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்குள் கடந்த வாரம் புதன்கிழமை மர்ம பொட்டலத்தை கைப்பற்றிய போலீசார், அதை சோதனையிட்டதில், வெள்ளை நிறப்பவுடர் இருந்ததை அறிந்தனர்.

இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கைப்பற்றப்பட்டுள்ள மர்மப் பொருள் பயங்கரமான வெடிபொருளாக இருக்கலாம் என்றும், தேசிய புலனாய்வு முகமை இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதனிடையே, சட்டப்பேரவைக்குள் கைப்பற்றப்பட்ட வெள்ளை நிறப்பவுடர், ஆக்ராவில் உள்ள தடயவியல் துறை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டதாகவும், அங்கு நடத்திய சோதனையில் அது வெடிகுண்டுக்கான மூலப்பொருள் இல்லை என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், இதை மறுத்துள்ள உத்தரப்பிரதேச அரசு, ஆக்ரா தடயவியல் ஆய்வகத்தில் வெடிபொருட்களை ஆய்வு செய்வதற்கு தேவையான உபகரணங்கள் இல்லை என்றும், அதனால், அங்கு வெள்ளை நிறப்பவுடர் சோதனைக்காக அனுப்பப்படவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன