உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஆளுநர் கிரண்பேடி வலியுறுத்தல்

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடையாக உள்ள தொழில்நுட்ப இடையூறுகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் புதுச்சேரி கிராமங்களுக்கான உரிமை, கிராம பஞ்சாயத்துக்கள் மூலம் தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். குறைவான ஊழியர்கள் மற்றும் நிதி பற்றாகுறை காரணமாக கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் கிராமங்களை புறக்கணித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். கிராம பஞ்சாயத்து அமைப்பு இருந்தால் தான் மத்திய அரசிடம் இருந்து நிதியை சுலபமாக பெற முடியும் என்றும் கிரண்பேடி கூறியுள்ளார் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன