உலக அலைச்சறுக்குப் போட்டியில் களமாடிய வீரர், வீராங்கனைகள்

அமெரிக்காவில் நடைபெற்ற உலக அலைச்சறுக்குப் போட்டியை, திரளான பார்வையாளர்கள் வியந்து ரசித்தன.

கலிஃபோர்னியா மாகாணத்தில் சான் க்ளமண்ட் ((SAN CLEMENTE)) என்ற கடற்கரை நகரில், உலக அலைச்சறுக்கு லீக் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும், வீராங்கனைகளும் கலந்து கொண்டனர். நிலை கொள்ளாமல் பாய்ந்து வரும் அலைகளின் மீது, சரிந்து விழாமல் எதிர்கொண்டு அவர்கள் திறமையை வெளிப்படுத்தியதை பார்வையாளர்கள் ஆரவாரத்துடன் ரசித்தனர்.

ஆண்கள் பிரிவில் தென் ஆப்பிரிக்காவின் ஜோர்டி ஸ்மித்தும் ((JORDY SMITH)), மகளிர் பிரிவில் பிரேசிலைச் சேர்ந்த சில்வானா லிமாவும் ((SILVANA LIMA)) வெற்றி பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *