உலகின் மிக நீளமான நடை மேம்பாலம் சுவிட்சர்லாந்தில் திறப்பு

உலகின் மிக நீளமான நடை மேம்பாலம் சுவிட்சர்லாந்தில் திறக்கப்பட்டது. சுவிட்சர்லாந்தின் கிராச்சென் ((grachen)) மற்றும் ஜெர்மெட் ((zermett)) ஆகிய நகரங்களை இணைக்கும் இந்தப் பாலம் 500 மீட்டர் நீளம் கொண்டது.

தரையில் இருந்து 85 மீட்டர் உயரத்தில் இந்தப் பாலமானது கட்டமைக்கப்பட்டுள்ளது. நாலாபுறமும் எழில் கொஞ்சும் மலைத்தொடர்களும், இதமான சூழலும் பாதசாரிகளின் பயணத்துக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் உள்ளது. இரண்டரை ஆண்டுகளாக கட்டப்பட்ட இந்தப் பாலம் அதிர்வை தாங்கும் வகையிலான அமைப்புடன் உருவாக்கப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன