உலகின் செல்வாக்குள்ள 100 மனிதர்கள் பட்டியல் வெளியீடு

உலகின் செல்வாக்குள்ள மனிதர்கள் பட்டியலில் பிரதமர் மோடி, பே டி.எம்.நிறுவனர் விஜய் சேகர் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். டைம்ஸ் பத்திரிகை ஆண்டுதோறும் செல்வாக்கு உள்ள நூறு பேரில் பட்டியலை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டுகான பட்டியலில் தலைவர்கள் பிரிவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதி ஷீ ஜின்பிங் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களுக்கான பிரிவில் டொனொல்டு டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப், அவரது கணவர் ஜேரட் குஷ்னர், விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே அமெரிக்க நடிகை எம்மா ஸ்டோன், பே டி.எம்.நிறுவனர் விஜய் சேகர் சர்மா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன