உலகப்புகழ் பெற்ற ஆலப்புழா படகுப் போட்டி – பெண்களும் பங்கேற்று அசத்தல்

கேரள மாநிலம் ஆலப்புழாவில் நடைபெற்ற நேரு கோப்பை படகுப் போட்டியை ஏராளமானோர் கண்டு களித்தனர். பெண்களும் பங்கேற்ற இந்தப் போட்டியில் 140 அடி நீளமுள்ள பாம்புப் படகுகள் ஒன்றையொன்று முந்திச் செல்ல முயன்றது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

படகுப் போட்டியை உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்தனர். கடந்த 1952ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் நேருவால் தொடங்கி வைக்கப்பட்ட இந்தப் படகுப் போட்டி தற்போது நேரு கோப்பைக்கான போட்டியாக நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன