Advertisement

உரிமைகள் பறிக்கப்படுவதாக கூறி அமெரிக்க வெள்ளை இன மக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை

அமெரிக்காவின் விர்ஜீனியா மாநிலத்தில் வெள்ளை இன மக்கள் போராட்டத்தின் போது இருதரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அமெரிக்கா உள்நாட்டுப் போரில் ராணுவ தளபதியாக செயல்பட்ட ராபர்ட் எட்வர்டு லீ-யின் உருவச்சிலையை அகற்ற விர்ஜீனியா மாகாண அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வெள்ளை இன மக்கள், விர்ஜீனியாவில் உள்ள சார்லோட்டஸ்வில்லே நகரில் திரண்டு ஊர்வலம், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் போது வெள்ளை இன மக்கள் போன்றே உடைகள் அணிந்து வந்த சிலர், திடீரென போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்க தொடங்கினர். சிறிது நேரத்தில் இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக் கொண்டதால், வன்முறை உருவானது.

இதை அடுத்து அங்கு போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போராட்டத்தைக் கைவிடுமாறு விர்ஜினியா ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ள நிலையில், அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அதிவேகமாக அவ்வழியாகச் சென்ற கார் ஒன்று, கூட்டத்திற்குள் புகுந்தது. போராட்டக்காரர்கள் மீது கார் சரமாரியாக மோதியதில் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். 19 பேர் காயம் அடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். வேண்டுமென்றே
காரை வைத்து மோதினாரா அல்லது விபத்து தானா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே போராட்டத்தைக் கண்காணிக்கச் சென்ற காவல்துறைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில், ஜே குல்லென் ((Jay Cullen)) மற்றும் பைலட் பெர்க் பேட்ஸ் ((Berke M.M. Bates)) ஆகிய அதிகாரிகள் இருவர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன