உயிருக்கு ஆபத்தான இரண்டு நோய்கள் கொண்ட நபர் – தனியார் மருத்துவமனை சாதனை

உயிருக்கு ஆபத்தான இரண்டு நோய்களைக் கொண்டிருந்த நோயாளி ஒருவர் அடுத்தடுத்த அறுவைச் சிகிச்சை மூலம் காப்பாற்றப்பட்ட சம்பவம் பெங்களூருவில் நிகழ்ந்துள்ளது. இங்குள்ள நாராயணா சிட்டி மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காக ((Naresh Barela)) நரேஷ் பரேலா என்பவர் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது நடைபெற்ற பரிசோதனையில், அவருக்கு இதயநோய் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு அறுவை சிகிச்சைகளும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. நோயாளி ஒருவருக்கு உயிர் காக்கும் இரண்டு அறுவை சிகிச்சைகள் அடுத்தடுத்து நடைபெறுவது இந்தியாவில் இதுவே முதன்முறை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன