உயர் நீதிமன்ற வளாகத்தில் காவலரை கன்னத்தில் அடித்த நபர்

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சக போலீசார் முன்னிலையில் காவலர் ஒருவரை, வழக்கறிஞர் தோற்றத்தில் இருந்த நபர் தாக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. உயர்நீதிமன்ற வளாகத்தின் 2வது நுழைவு வாயிலில் நுழைந்த அந்த நபரை, பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் கந்தவேல், அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டுள்ளார். ஆனால், அடையாள அட்டையை காண்பிக்காமல் அவர் கந்தவேலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், எதிர்பாராத விதமாக, கந்தவேலை கன்னத்தில் அடித்தார்.
அந்த நபர் தாக்கியதில் இடது கண்ணில் காயமடைந்த கந்தவேல், எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காவலரை தாக்கிய நபர், வழக்கறிஞரா? என்பது தெரியாத நிலையில், அவரை நீதிமன்ற வளாக போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன