உத்தரகாண்ட் மாநிலம் வழியாக இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவல்

உத்தரகாண்ட் மாநில எல்லைக்குள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை சீன ராணுவம் ஊடுருவியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பூடானின் டோக்லம் பீடபூமியை ஆக்கிரமித்து, இந்தியாவையும் எதிர்ப்பையும் மீறி, சாலை உள்ளிட்ட கட்டுமான நடவடிக்கைகளில் ஈடுபட சீன ராணுவம் முயற்சி செய்தது. இதற்கு இந்திய தரப்பில் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, இருநாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டு, சீன வீரர்கள் திரும்பிச் சென்றனர். இதைத் தொடர்ந்து, இருநாட்டு எல்லையிலும் படைகள் குவிக்கப்பட்டுள்ளதால், ஒரு மாதத்திற்கும் மேலாக பதற்றம் நீடிக்கிறது.

இதனிடையே, கடந்த 25ஆம் தேதி உத்தரகாண்ட் மாநில எல்லைக்குள் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்த தகவல் வெளியாகியுள்ளது. காலை 9 மணியளவில் உத்தரகாண்ட் எல்லையான பரஹோட்டி-க்குள் ((Barahoti)) நுழைந்த சுமார் 12 சீன ராணுவத்தினர் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை ஊடுருவியதாக கூறப்படுகிறது. பின்னர் மீண்டும் அவர்கள் திரும்பிச் சென்றதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன