உதகை – காட்டெருமை மீது இரு சக்கர வாகனம் மோதி 2 பேர் காயம்

உதகையில் காட்டெருமை மீது இரு சக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் காயமடைந்தனர்.

பேரார் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் 2 இளைஞர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் இருந்து காட்டெருமை ஒன்று சாலையை கடந்துள்ளது. இதனை கவனிக்காமல் இளைஞர்கள், காட்டெருமை மீது இரு சக்கர வாகனத்தை மோதினர். இதில் காயமடைந்த இருவரும் உதகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சாலைகளில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் கவனத்துடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!