உணவு டெலிவரி சேவையில் களமிறங்கிய உபெர் நிறுவனம்

வாடகைக் கார் நிறுவனமான உபெர் நிறுவனம், உபெர் ஈட்ஸ் என்ற ஆப் மூலம் உணவு டெலிவரி செய்யும் தொழிலிலும் சென்னையில் களமிறங்கியுள்ளது.

வாடகைக்கார் சேவையில் முன்னணியில் இருக்கும் உபெர் நிறுவனம், உணவகங்களில் இருந்து உணவைப் பெற்று வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து வழங்கும் சேவையை வியாழன் முதல் சென்னையில் தொடங்கியுள்ளது. ஆழ்வார்பேட்டை, அடையாறு, நுங்கம்பாக்கம், தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 200 உணவகங்களுடன் முதல்கட்டமாக கைகோர்த்துள்ளது. 200 ஓட்டுநர்களையும் இப்பணியில் ஈடுபடுத்தியுள்ளதாகக் கூறும் உபெர் நிறுவனம் அறிமுகச் சலுகையாக டெலிவரி சார்ஜ்-ஆக 1 ரூபாய் என நிர்ணயித்துள்ளது.

குறைந்த பட்ச விலையும் நிர்ணயிக்கப்படவில்லை. ஒரு வாரத்தில் வாடிக்கையாளர் அசைவம் சாப்பிடாத தினங்களைக் குறித்துக் கொண்டு அதற்கேற்றார் போல் சேவை வழங்கும் வகையில் உபெர் ஈட்ஸ் ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன