உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு டி.ஜி.பி.ராதாகிருஷ்ணன் பணி ஓய்வு

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு டி.ஜி.பி.ராதாகிருஷ்ணனின் பணி நிறைவு விழா நடைபெற்றது.

1983-ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். முடித்த ராதாகிருஷ்ணன், முதலில் திண்டுக்கல் மாவட்ட ஏ.எஸ்.பி.யாக பணியாற்றினார். பின்னர் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், திருச்சி, கோவை, சென்னை மாநகரங்களின் காவல் ஆணையர் லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி என பல பதவிகளை வகித்தவர். கடந்த ஆறு ஆண்டுகளாக குடிமைப் பொருட்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாகவும், டி.ஜி.பி.யாகவும் பணியாற்றிய ராதாகிருஷ்ணன் இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.

இதையடுத்து சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் அவருக்கு காவல்துறை அணிவகுப்புடன் பணிநிறைவு விழா நடைபெற்றது.

இந்தவிழாவில் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை காவல் துறை ஆணையர் ஏ.கெ.விஸ்வநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில் பேசிய ராதாகிருஷ்ணன் பணிக்காலங்களை நினைவுகூர்ந்து கண்கலங்கினார்.

காவல் துறை தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப மேம்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், காவல்துறையினர் வாட்ஸ் அப் போன்ற வசதிகளை புலனாய்வுப் பணிகளுக்காக பயன்படுத்தவேண்டுமே தவிர, தேவையற்ற நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன