Advertisement

உடலுறுப்பு தான தினம் : ஆளுநர் மாளிகையில் சிறப்பு நிகழ்ச்சி

உடலுறுப்புகளை தானம் செய்தவர்களின் குடும்பங்களுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ்சிறப்பு பரிசுகளை வழங்கி கவுரவித்தார். உடலுறுப்பு தான தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தமிழக ஆளுநர் வித்யாசாகர்ராவ், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் உடலுறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் சிறப்பாக உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு ஆளுநர் வித்யாசகர்ராவ் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன