ஈரோடு மாவட்டத்தில் மருத்துவம் பார்த்த 2 போலி மருத்துவர்கள் கைது

ஈரோடு மாவட்டத்தில் இரண்டு போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தியூர் அருகே உள்ள முனியப்பம்பாளையம் என்ற கிராமத்தில் தனியார் மருந்தகத்தில் மருத்துவத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சரவணன் என்பவர் 10ஆம் வகுப்பு படித்துவிட்டு மெடிக்கல் வைத்துக் கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்தது கண்டுபிடிக்கபட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் அந்தியூர் போலிசார் சரவணனைக் கைது செய்தனர்.

இதேபோல் பவானி அருகே உள்ள கீழ்வானி என்ற கிராமத்தில் ஹோமியோபதி மருத்துவம் படித்து ஆங்கில மருத்துவம் பார்த்த சீனிவாசன் என்பவரை ஆப்பக்கூடல் போலிசார் கைது செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன