இ-ஸ்கூட்டருக்கு மானியம் – மின்சார வாகன தயாரிப்பாளர்கள் கோரிக்கை

மின்சாரத்தில் இயங்கும் இ-ஸ்கூட்டர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் அரசு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நிதி ஆயோக்குக்கு மின்சார வாகனத் தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெட்ரோல் டீசல்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் மின்சார வாகனத் தயாரிப்பாளர் சமூகம் என்ற அமைப்பின் சார்பில் நிதி ஆயோக்குக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் மின்சார வாகனங்களை வாங்க மக்களை ஊக்குவிக்க அவற்றின் விலையைக் குறைக்க வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதிக திறன் வாய்ந்த லித்தியம் வகை பேட்டரிகளோடு இ-ஸ்கூட்டர்களை தயாரிக்கும்போது ஒரு வாகனத்துக்கான அடக்க விலை 80 ஆயிரம் ரூபாய் ஆவதாகவும், எனவே இந்த வகை ஸ்கூட்டர்களுக்கு ஒரு ஆண்டுவரை 40 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கும் வகையில் அரசின் கொள்கைகளில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!