இளையான்குடி அருகே பழமையான புத்தர் சிலை கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலையை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இளையான்குடியை அடுத்துள்ள மல்லல் கிராமத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கால்வாயில் பழமையான புத்தர் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. மிகவும் சிதிலமடைந்த நிலையில் காணப்படும் இந்த சிலை, 20 ஆண்டுகளுக்கு முன்னதாகவே கண்டெடுக்கப்பட்ட சிலை என்றும், இதுகுறித்து அப்போதே தொல்லியல் துறையினருக்கு தகவல் அளித்து நடவடிக்கை எடுக்காததால், சிலை மீண்டும் மாயமானதாகவும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். சிலை குறித்து தொல்லியல் துறையினர் உரிய ஆய்வு நடத்தவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன