இளம் கைம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கணவனை இழந்த பெண் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.திருச்செங்கோடு அடுத்த சிந்தம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆதிலட்சுமி. இவரது கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன் உயிரிழந்து விட்ட நிலையில், தமது 2 மகன்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை சிந்தம்பாளையம் அருந்ததியர் தெரு அருகே விளைநிலப் பகுதியில் ஆடைகள் கலைக்கட்ட நிலையில் ஆதிலட்சுமி சடலமாக கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். ஆனால் கொலை எவ்வாறு நடந்தது என்பது தொடர்பாக தடயங்கள் கிடைக்காததால், உடற்கூறாய்வுக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்தனர். சடலம் கிடந்த இடத்திற்கு அருகே மதுபாட்டில், உணவுப்பொட்டலங்கள் கிடந்ததால் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தடயங்களை சேகரித்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன