இலங்கை அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் – டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்

இலங்கைக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இலங்கைக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி பல்லேகெலேவில் (pallekele) தொடங்கியுள்ளது.

இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகார் தவான், லோகேஷ் ராகுல் ஆகியோர் களமிறங்கினர். இந்தப் போட்டியில் ரவீந்திர ஜடேஜா விளையாட ஐ.சி.சி. தடை விதித்துள்ளதால் அவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த டெஸ்டில் வெற்றி பெற்றால் வெளிநாட்டு தொடரை முதல் முறையாக முழுவதுமாக வென்ற இந்திய அணி என்ற பெருமை விராட் கோலி தலைமையிலான அணிக்கு கிடைக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன