இலங்கையில் விமான நிலையம் அமைக்க இந்தியா பேச்சுவார்த்தை – இலங்கை அமைச்சர்

இலங்கையில் சீனா அமைத்துவரும் துறைமுகத்துக்கு அருகே விமான நிலையம் அமைக்க இந்தியா பேச்சுவார்த்தை நடத்திவருவதாக இலங்கை அமைச்சர் நிர்மல் சிறிபாலா தெரிவித்துள்ளார்.

கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிர்மல் சிறிபாலா, சீனாவின் பொருளாதார நெடும்பாதை திட்டத்தின் கீழ் அந்நாடு துறைமுகம் அமைத்துவரும் ஹம்பன்டோட்டா பகுதியில் மாற்று முதலீட்டாளர்களை அனுமதிப்பது குறித்து இலங்கை அரசு யோசித்து வருவதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் இப்பகுதியில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்துடன் இந்தியா அணுகியுள்ளதாகவும் அது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன