இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் சேதமடைந்து மோசமான நிலையில் உல்லது – தமிழக மீனவப் பிரதிநிதிகள்

இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் சேதமடைந்து மோசமான நிலையில் இருப்பதாக அந்நாட்டில் இருந்து மதுரை திரும்பிய தமிழக மீனவப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இருநாட்டு மீனவப் பிரச்சனை தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், கடந்த 2015ஆம் ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்ட 42 படகுகளை விடுவிப்பதாக இலங்கை அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், படகுகளின் நிலை பற்றி ஆய்வு செய்ய தமிழக மீன்வளத்துறை கூடுதல் இயக்குனர் ஜெ.எஸ் சமீரன் தலைமையில் இலங்கை சென்ற மீனவப் பிரதிநிதிகள் ஞாயிறன்று மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர்.

செய்தியாளர்களுடன் பேசிய மீனவ பிரதிநிதிகள், விடுவிக்கப்பட்ட படகுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்தனர். 9 படகுகள் மிக மோசமாக சேதமடைந்திருப்பதாகவும் கூறினார். படகுகளை சரிசெய்ய தேவைப்படும் செலவுகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்கவும் மீனவ பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!