இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 487 ரன்கள் குவித்துள்ளது

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 487 ரன்கள் குவித்துள்ளது.

பல்லெகெலேவில் நடைபெற்று வரும் இப்போட்டியின் முதல் நாளில் இந்தியாவின் ஷிகார் தவான், லோகேஷ் ராகுல் ஆகியோர் சிறப்பான தொடக்கம் அளித்தனர். ராகுல் அரை சதம் கடந்த நிலையில், ஷிகார் தவான் சதம் அடித்தார். நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்திருந்தது. இன்று இரண்டாம் நாளில் ஹர்திக் பாண்ட்யா, வேக ரன்குவிப்பில் ஈடுபட்டார். 86 பந்துகளில் 7 சிக்சர்கள் அடித்து டெஸ்ட் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

108 ரன்கள் எடுத்திருந்த போது பாண்ட்யா ஆட்டமிழந்தார். இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்தியா 487 ரன்கள் குவித்தது. இலங்கை தரப்பில் புதுமுக வீரரான லக்ஷன் சண்டகன் 5 விக்கெட் வீழ்த்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன