இறக்குமதியான பீரங்கிகள் 30 ஆண்டுகளில் முதல்முறையாக சேதம்

உள்நாட்டு வெடிப்பொருட்களில் ஏற்பட்ட பழுதால், இறக்குமதி செய்யப்பட்ட பீரங்கி துப்பாக்கி முதல்முறையாக சேதமடைந்துள்ளது.

அமெரிக்க நிறுவனத்திடம் முதற்கட்டமாக வாங்கப்பட்ட பீரங்கி துப்பாக்கிகள் ராஜஸ்தானில் உள்ள பொக்ரானில் கடந்த 2 ந்தேதி சோதனை செய்யப்பட்டது. அப்போது, பீரங்கி துப்பாக்கியில் பெரும் சேதம் ஏற்பட்டது. இந்திய ஆயுத தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட குறைபாடு உள்ள வெடிபொருட்களை பீரங்கிகளில் பொருத்தி சோதனை செய்ததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இறக்குமதி செய்யப்பட்ட பீரங்கி துப்பாக்கிகள் சேதமடைவது இதுவே முதல் முறையாக கருதப்பட்டாலும், பழுதடைந்த வெடிபொருட்களால் உள்நாட்டு பீரங்கி துப்பாக்கிகள் அவ்வப்போது சேதமடைவது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன