இர்மா சூறாவளியால் 25 சதவீத வீடுகள் கடும் சேதம்

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை தாக்கிய இர்மா சூறாவளி, கீஸ் தீவில் இருந்த நான்கில் ஒரு பங்கு ((25 சதவீத)) வீடுகளை சின்னாபின்னமாக்கிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஃபுளோரிடா மாகாணத்தில் இர்மா புயல் தாண்டவமாடியதை அடுத்து, அங்கு மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றனர். இர்மா புயல் மையம் கொண்டு தாக்கிய கீஸ் தீவுப்பகுதியில் ஆய்வு செய்த மீட்புக்குழுவினர், அங்கு நான்கில் ஒரு பங்கு வீடுகள் சூறாவளியால் சின்னாபின்னமாகிவிட்டதாகவும், மேலும் பல வீடுகள் இடிந்து விழும் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். கீஸ் தீவுக்கு திரும்ப பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு சிதிலமடைந்து காணப்படும் தங்களது வீடுகளை பார்த்து, அவர்கள் கண்ணீர் வடிப்பதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!