Advertisement

இரட்டைக் கொலை சம்பவத்தில் கூலித் தொழிலாளி கைது

கோவை மாவட்டம் சூலூர் அருகே விசைத்தறி உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். கருமத்தம்பட்டியில் குமாரசாமி என்பவர், விசைத்தறிக் கூடம் நடத்தி வந்தார்.

அங்கு வேலை செய்யும் ஈரோட்டை சேர்ந்த பெருமாளுக்கு, சரியான ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக குமாரசாமியின் வீட்டிற்கு சென்று பெருமாள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது பெருமாள், இரும்பு கம்பியை கெண்டு குமாரசாமியின் தலையில் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தாக கூறப்படுகிறது.

இதையடுத்து வீட்டிலிருந்த குமாரசாமியின் மனைவியையும் கொலை செய்து , அவர் அணிந்திருந்த நகையை பெருமாள் பறித்து சென்றதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த கருமத்தம்பட்டி போலீசார், தப்பி ஓடிய பெருமாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன