இயக்குநர் சங்கத் தேர்தலில் விக்ரமன் தலைவராகத் தேர்வு

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு நடைபெற்ற தேர்தலில் விக்ரமன் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதன் நிர்வாகிகளின் பதவிக்காலம் நிறைவடைந்ததையொட்டி நேற்று நடைபெற்ற தேர்தலில் 1605 வாக்குகள் பதிவாகின. இதில், புதுவசந்தம் அணியைச் சேர்ந்த விக்ரமன் 1532 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பொதுச்செயலாளராக செல்வமணியும், பொருளாளராக பேரரசுவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செல்வமணி, பெப்சி அல்லாத தொழிலாளர்களுடன் வேலைபார்ப்போம் என்று கூறியதை விஷால் வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன