இமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவில் சிக்கிய அரசு பேருந்துகள்

இமாச்சலப் பிரசதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மாண்டி ((Mandi)) மாவட்டத்தில் சம்பா என்ற இடத்திலிருந்து மணாலிக்கு ((Chamba from Manali))சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்துகள் கொட்ரூப்பி ((Kotroopi)) என்ற பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கின. நிலச்சரிவில் சிக்கிய பேருந்துகளில் இருந்து 10 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பேருந்தினுள் 50 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன