இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் கோபால கிருஷ்ண காந்தி

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

குடியரசு துணைத்தலைவருக்கான தேர்தல் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறுகிறது. இதில் எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுததப்பட்டுள்ள கோபால கிருஷ்ண காந்தி, வேட்புமனு தாக்கலின் இறுதிநாளான இன்று, வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார். காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் முன்னணித் தலைவர்கள் உடன் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன