இன்று கூடுகிறது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் இன்று நடைபெறுகிறது. ஜூலை 1 -ம் தேதி அமலான ஜி.எஸ்.டி.யை எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் அரங்கேறி வருகின்றன. சிறிய, நடுத்தர வியாபாரிகள் ஜி.எஸ்.டி.யில் திருத்தம் செய்யுமாறு கோரியுள்ளனர். இந்நிலையில், ஜி.எஸ்.டி. அமல்படுத்திய பிறகு ஏற்பட்டுள்ள வரி சிக்கல்கள் குறித்து ஆலோசிக்க ஆகஸ்ட் 5-ம் தேதி ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற இருந்தது. அந்தக் கூட்டம் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. வரிவிகிதங்களில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்து முடிவுகள் எட்டப்படும் என்றும், வரி செலுத்துவோருக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களைப் போக்கும் புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன