இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பெங்குலு நகரில் இருந்து 81 கிலோ மீட்டர் தொலைவில், 67 கிலோ மீட்டர் ஆழத்தில் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால் ஆழிப்பேரலைகள் உருவாவதற்கான வாய்ப்பு ஏதும் இல்லை என்றும் புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர். நிலநடுக்கம் காரணமாக சிங்கப்பூரில் நில அதிர்வு உணரப்பட்டதாக அந்நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன