Advertisement
Advertisement

இந்துவாக இருந்தாலும், பாஜக-வை போல மக்களைப் பிரிக்க முயன்றதில்லை-சித்தராமையா

தான் 100 சதவீதம் இந்துவாக இருந்தாலும் பாஜகவைப் போல் மக்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்த முயன்றதில்லை என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.

மைசூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், உத்தரப்பிரதேசத்தைப் போல் கர்நாடகாவிலும் மக்களைப் பிரித்து ஆட்சியைக் கைப்பற்றும் பாஜகவின் எண்ணம் பலிக்காது என்றார். தனது பெயரை சீத்தா, ராமா என்று பிரித்து கூறிய சித்தராமையா தானும் 100 சதவீதம் இந்துதான் என்று கூறினார்.

ஆனாலும் மக்களை ஒருபோதும் பிரிக்க முயற்சி செய்ததில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கர்நாடகாவில் பாஜக-வின் இந்துத்துவா கொள்கையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன