இந்திய ராணுவத்தை நவீனப்படுத்துவதற்கு உதவ தயார் – அமெரிக்கா

இந்திய ராணுவத்தை நவீன மயமாக்குவதற்கு உதவி செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த அமெரிக்காவின் பசிபிக் பிராந்திய தளபதி ஹாரி ஹாரிஸ் (( harry harris )), அமெரிக்கா – இந்தியா இடையிலான உறவு, மற்ற நாடுகளுக்கிடையே உள்ள உறவைவிட தனித்துவம் வாய்ந்தது என்று கூறினார். இரு நாடுகளும் கடந்த 10 ஆண்டுகளில், பாதுகாப்புத்துறையில் செய்துகொண்ட வர்த்தகம் 15 பில்லியன் டாலரை தொட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியா தனது ராணுவத்தை மேலும் பலப்படுத்த, வரும் காலங்களில் அமெரிக்காவைத்தான் நாடும் என்று குறிப்பிட்ட தளபதி ஹாரி ஹாரிஸ், இதற்கு உதவ அமெரிக்கா எப்போதும் தயாராக இருப்பதாக தெரிவித்தார். அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டால், இந்தியா தனது ராணுவத்தை சிறந்த வழியில் நவீனப்படுத்த முடியும் என்றும் ஹாரி ஹாரிஸ் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன