இந்திய பொருட்களை விட சீன பொருட்கள் மலிவாக கிடைப்பது எப்படி?

சீனாவில் ஏற்றுமதியாளர்களுக்கு அதிக மானியம் வழங்கப்படுவதால் தான் சீன பொருட்கள் மலிவான விலையில் கிடைப்பதாக மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை இணையமைச்சர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில், இந்திய பொருட்களை விட, சீன பொருட்கள் குறைவான விலையில் கிடைப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய இணையமைச்சர் ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி, சீன ஏற்றுமதியாளர்களுக்கு அந்நாட்டு அரசு அதிகளவில் மானியம் வழங்குவதே, சர்வதேச சந்தையில் சீனப் பொருட்கள் மலிவாக கிடைப்பதற்கு காரணம் என்று கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன