Advertisement
Advertisement

இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவு

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் ஒரே நாளில் 348 புள்ளிகள் உயர்ந்துள்ளது.

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று ஏற்றத்துடன் காணப்பட்டது. உள்நாட்டு முதலீட்டாளர்கள் உலோகம், மருந்துகள், தொலைத்தொடர்பு, ரியல் எஸ்டேட் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டியதால் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் வர்த்தம் ஏற்றத்துடனேயே நிறைவுபெற்றது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 348 புள்ளிகள் உயர்ந்து, 31 ஆயிரத்து 182 புள்ளிகளில் நிலைகொண்டது. இதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி வர்த்தக இறுதியில் 111 புள்ளிகள் உயர்ந்து 10 ஆயிரத்து 96 புள்ளிகளில் நிலைகொண்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன