இந்திய சீதோஷணத்தில் விளையாண்டால் எங்கும் விளையாடலாம்-மெக்ராத்

இந்திய சீதோஷன நிலையில் சிறப்பாக செயல்படும் வேகப்பந்து வீச்சாளர்கள் எந்த நாட்டிற்கு சென்றாலும் சிறப்பான முறையில் பந்து வீச்சை மேற்கொள்வார்கள் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபின், செய்தியாளர்களைச் சந்தித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின், முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் தொழில்நுட்ப ரீதியில் நுண்ணிய பிரச்சனைகள் கூட சரிசெய்து கொண்டு விளையாடுவதற்கான சாதனங்கள் இன்றைய இளைஞர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருப்பதாகத் தெரிவித்தார். நிகழ்சியில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் டிராய் ஹோலி ஆகியோர் உடன் இருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!