இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருண் நியமனம் என தகவல்

ரவி சாஸ்திரி பரிந்துரையின்பேரில், இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருண் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை தேர்வு செய்த, சச்சின், கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமணன் ஆகியோர் அடங்கிய அறிவுரைக்குழு, ஜாகீர்கானை பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் நியமித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரவி சாஸ்திரி, பரத் அருணை பந்துவீச்சு பயிற்சியாளராகவும், ஜாகீரை ஆலோசகராகவும் நியமிக்குமாறு வலியுறுத்தி வந்தார்.

இதனிடையே, முழு நேர பயிற்சியாளராக பணியாற்ற ஜாகீர்கான் விரும்பவில்லை என்றும், இதனால், ரவி சாஸ்திரி பரிந்துரைத்த பரத் அருணையே பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்க பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!