இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி –

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடைபெறுகிறது. ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று 20-ஓவர் போட்டிகளில் விளையாடுதவற்காக இந்தியா வந்துள்ளது.

இந்நிலையில், இரு அணிகளும் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் பகல்- இரவு ஆட்டமாக இன்று நடைபெறுகிறது. இலங்கை சென்றிருந்த இந்திய கிரிக்கெட் அணி அனைத்து ஆட்டங்களிலும் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது.

இதேபோல ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை வெல்லும் ஆர்வத்துடன் வீராட்கோலி தலைமையிலான இந்திய அணி களம் இறங்குகிறது. அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அணி பலம் பொருந்தியது என்பதால் இந்திய வீரர்கள் மிகவும் கடுமையாக போராட வேண்டியிருக்கும்.

இன்றைய போட்டியில், ஷிகர் தவானுக்கு பதிலாக தொடக்க வீரராக ரஹானே அல்லது ராகுல் களம் இறக்கப்பட வாய்ப்புள்ளது. பேட்டிங்கில் கேப்டன் வீராட்கோலி, தோனி, ரோகித் சர்மா ஆகியோர் சிறப்புடன் விளையாடி வருகின்றனர்.

அக்சர் பட்டேல், யஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ் ஆகியோரின் பந்துவீச்சு இந்திய அணிக்கு வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் சுமித், வார்னர், மேக்ஸ்வெல் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும், கும்மின்ஸ், நாதன் கோல்டர், பலக்னெர் போன்ற சிறந்த பந்துவீச்சாளர்களும் உள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வெற்றியுடன் இந்தியா தொடங்குமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன