இந்தியாவுக்கு 20 ஆண்டுகளில் 2,100 விமானங்கள் விற்க திட்டம்

அடுத்த 20 ஆண்டுகளில் 2,100 பயணிகள் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா முன்வரும் என எதிர்பார்ப்பதாக விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் கூறியுள்ளது. இந்திய மதிப்பில் ஏறத்தாழ 18 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த விற்பனை நடைபெற வாய்ப்பு இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 20 சதவீதம் அதிகரித்து வருவதாகவும், இது இந்திய அளவில் 5 சதவீதம் அதிகரிப்பதாக போயிங் நிறுவனத்தின் ஆசிய, பசிபிக் பிராந்திய துணைத் தலைவர் தினேஷ் கேஷ்கர் கூறியுள்ளார். மேலும் அதிக பயணிகள் விமானத்தில் பயணம் செய்யும் நிலையை உருவாக்க போயிங் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை விமானமான 737 மற்றும் 737 மேக்ஸ் விமானங்களை இந்தியாவுக்கு விற்க தாங்கள் ஆவலாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன