இந்தியாவில் பிரபலமாகி வரும் சராஹா ஆப்

மொட்டை கடிதம் போன்று ரகசியமாக தகவல் அனுப்ப உருவாக்கப்பட்ட சராஹா ஆப், இந்தியாவில் மிகவும் பிரபலமாகி வருகிறது.

அரபு நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஆப்பில் மொட்டை கடிதம் போன்றே, யார் தகவல்கள் அனுப்புகின்றனர் என்ற விவரங்களை தெரிவிக்காமல் சராஹா ஆப் பயன்படுத்தும் ஒருவருக்கு சமூக வலைதளம் மூலமாக எவர் வேண்டுமானாலும் தகவல்களை அனுப்ப முடியும். பேஸ்புக்கில் நண்பர்களாக இருப்பவர்கள் தங்கள் நண்பரை பற்றி உண்மையில் என்ன எண்ணம் கொண்டிருக்கின்றனர் என்பதை தங்களை யார் என்று வெளிப்படுத்தால் தெரிவிக்க முடியும்.

சுவாரஸ்யமான இந்த ஆப்பை இந்தியாவில் இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தியுள்ளனர். இந்த ஆப்பில் பரிமாறப்படும் தகவல்கள் நிறுவனத்தின் கைவசம் இருக்கும் என்பதால், ரகசியம் எப்போதும் காக்கப்படுமா என்பது கேள்விக்குறியே என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன