இந்தியாவில் தொடரும் ட்ரம்ப் நிறுவனத்தின் வர்த்தகத் திட்டங்கள்

அமெரிக்காவிற்குப் பிறகு இந்தியாவில் மட்டுமே அதிபர் ட்ரம்பின் கட்டுமானத் தொழில் சார்ந்த பல திட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

தொழிலதிபரான டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற உடனேயே பல நாடுகளில் அவர் ஏற்கனவே செய்துகொண்டிருந்த தனது வியாபார ரீதியிலான திட்டங்களை முடிவுக்குக் கொண்டுவந்தார். சட்ட ரீதியிலான சிக்கல்களைத் தவிர்க்கும் வகையில் ட்ரம்ப் தனது வியாபாரங்களை மற்ற நாடுகளில் தவிர்த்து விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் ட்ரம்ப்பின் நிறுவனம் இந்தியாவில் மட்டும் இன்றும் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

புனே, மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய முக்கிய நகரங்களில் ட்ரம்ப்பின் கட்டுமான நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகரமாக பல திட்டங்களை நிறைவேற்றி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!