இந்தியாவின் பட்டினிப் பிரச்னை மிக மோசமாக இருப்பதாக உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வில் தகவல்

இந்தியாவின் பட்டினிப் பிரச்னை மிக மோசமாக இருப்பதாக உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

வளரும் நாடுகள் பட்டியலில் உள்ள 119 நாடுகளில் பட்டினிப் பிரச்னையால் அதிக பாதிப்பை சந்திப்பதில் இந்தியா 31 புள்ளிகளுடன் 100-வது இடத்தில் உள்ளது. சிலி, கியூபா, துருக்கி ஆகிய நாடுகள் 5 புள்ளிகளுக்குக் குறைவாகப் பெற்று பட்டினிப் பிரச்னையை சமாளிப்பதில் சிறப்பாக விளங்குகிறது. நேபாளம், மியான்மர், வங்கதேசம், இலங்கை, சீனா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவை விட முன்னிலையில் உள்ளன. இந்தியாவில் ஐந்தில் ஒரு குழந்தை அதாவது 21 சதவீத குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து பற்றாக்குறையுடன் இருப்பதாகவும் குளோபல் ஹங்கர் இண்டெக்ஸ் என்ற ஆய்வு தெரிவித்துள்ளது.

One Response to இந்தியாவின் பட்டினிப் பிரச்னை மிக மோசமாக இருப்பதாக உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வில் தகவல்

  1. A. Arul சொல்கிறார்:

    makaluku sapadu koduka thupella, ethula digital india

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன