இந்தியர்களிடம் சீன விமான நிறுவனம் தரக்குறைவாக நடந்துகொண்டதாக புகார்

டோக்லம் விவகாரத்தை கருத்தில் கொண்டு இந்திய பயணிகளிடம் சீன விமான நிறுவனம் தரக்குறைவாக நடந்துகொள்வதாக இந்தியப் பயணி ஒருவர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் புகார் அளித்துள்ளார்.

சாஹெல் என்பவர் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோ சென்றதாகவும், வழியில் ஷாங்காயின் புடோங் விமான நிலையத்தில் மாற்று விமானத்துக்காக காத்திருந்த போது ஊழியர்கள் கண்ணியக் குறைவாக நடந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்த போது அவர்களும் கடுமையாகப் பேசியதாகவும் பயணி சாஹெல் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து சீன வெளியுறவு அமைச்சகத்துக்கும், விமான நிலைய நிர்வாகத்துக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தங்கள் ஊழியர்கள் கண்ணியக் குறைவாக நடந்துகொள்ளவில்லை என சீன விமான நிறுவனம் மறுத்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன