Advertisement

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 1.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதை அடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானே மற்றும் ரோகித் சர்மா ஜோடி களமிறங்கி விளையாடி வருகின்றனர். போட்டி நடைபெறுவதை ஒட்டி சென்னை சேப்பாக்கம் மைதானம் ரசிகர்கள் கூட்டத்தில் நிரம்பி வழிகிறது.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4க்கு1 என்ற கணக்கில் இழந்தது. ஆனால் அண்மையில் இலங்கையுடனான அனைத்து போட்டிகளிலும் வென்ற உற்சாகத்துடனும் இருக்கும் இந்திய அணி, அதே வியூகத்தை வைத்து ஆஸ்திரேலியாவை பழி தீர்க்கும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய மண்ணில் இரு அணிகளும் மோதிய 51 போட்டிகளில் ஆஸ்திரேலியா 25 போட்டிகளிலும், இந்தியா 21 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன